தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த 6 வருடங்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நயனும், விக்கியும் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்தனர்.
அங்கு இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், நயனும், விக்கியும் குழந்தைகளுடன் விளையாடிய ஒரு போட்டோவை விக்கி தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தோடு குழந்தைகளுடன் நேரம் எதிர்காலத்திற்கான பயிற்சி என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரோ என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நயன்தாரா வீட்டில் விரைவில் குழந்தை சத்தலாம் கேட்கலாம் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.