நயன்தாரா நடிப்பில் O2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
அண்மையில் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் உடன் நயன்தாரா இணைந்து நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் O2.
Presenting the Title Reveal of O2 Tamil Movie.
Coming soon on #DisneyplusHotstar#O2onHotstar #Nayanthara @DreamWarriorpic @prabhu_sr #Ritvick #GSViknesh #Thamizh #VishalChandrasekar pic.twitter.com/ZxrXPt1pxe
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 6, 2022
இப்படம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்தி வந்துள்ளது. இத்திரைப்படத்தில் எட்டு வயது மகனின் அம்மாவாக நயன்தாரா நடித்து இருக்கின்றார். நயன்தாராவுக்கு மகனாக ரித்விக் நடித்திருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.