நடிகை நயன்தாராவின் விஷூ கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளத்து சேலையில் தலை நிறைய பூ வைத்து ஸ்டைலாகப் போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் புகைப்படங்களைப் பார்த்த அனைவருக்கும் நயன்தாரா எலும்பும் தோலுமாக இருப்பது தான் அதிர்ச்சி அளித்துள்ளது.
சந்திரமுகி படத்து ஸ்டில்லை வெளியிட்டு அப்படி இருந்த நயன்தாராவா? இப்படி ஆகிட்டார் என்று சமூக வலைதளவாசிகள் வியந்து கேள்வி எழுப்பியுள்ளனர். இருக்க இருக்க நயன்தாரா மெலிந்து கொண்டே போகிறார். வயது ஏறிக் கொண்டிருப்பது முகத்தில் நன்றாகத் தெரிகிறது. சீக்கிரமாகத் தாலி கட்டுங்கள் விக்னேஷ் சிவன் என்கிறார்கள் ரசிகர்கள்.