Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை நயன்தாரா கையில் மோதிரம் அணிந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது . இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்களது வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும்  இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா கையில் மோதிரம் அணிந்திருக்கும்  புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |