நடிகைநயன்தாரா நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு நயன் – விக்கி டையே முதன்முறையாக சண்டை வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நயனுக்கு பதில் சமந்தாவின் பெயரை விக்கி டிக் செய்ததே இந்த சண்டைக்கு காரணமாக கூறப்படுகிறது.