நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகும் நிலையில், நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம் என சமூகவலைதள பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதாவது, வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றது தெரியவந்தது. இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வாடகைத்தாய் வாயிலாக குழந்தைகளை பெற்றதாக வந்த புகார் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில் தம்பதியினர் மற்றும் வாடகத்தாய் போன்றோர் வயது உள்ளிட்ட எந்த விதிகளையும் மீறவில்லை என்று தெரியவந்துள்ளது.