Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி திருமணத்தில் காஸ்ட்லியான கிப்ட் கொடுத்த ரஜினி”… வைரலாகும் புகைப்படம்….!!!!!

நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக் கொடுக்க  திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்தில் எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் ரஜினிகாந்த் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. திருமணத்திற்காக ரஜினிகாந்த் காஸ்ட்லியான கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கிப்டில் நயன்தாராவுக்கு காஸ்ட்லியான பட்டு புடவையும் விக்னேஷ் சிவனுக்கு பட்டு வேட்டி சட்டையும் இருந்ததாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |