நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது பத்திரிகையாளராக வலம் வருகின்றார். இவர் நடிகர், நடிகைகள் குறித்து வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருகின்றார். இவர் நகைச்சுவை நடிகராக இருந்ததைவிட பத்திரிகையாளராக மாறிய பின் மிகவும் பிரபலமாக உள்ளார். இவர் நடிகர், நடிகைகள் குறித்து வெளியிடும் செய்திகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பயில்வான் ரங்கநாதன், விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டு யானைமேல் அம்பாரி ஊர்வலம் போல் நடந்து இருக்கின்றது எனக் கூறியிருக்கின்றார்.
இதையடுத்து தனக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகைகள் குறித்து பேசுவேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர், நடிகைகள் குறித்து நான் பேசுவதைக் கேட்க மூன்று லட்சம் பேர் இருக்கின்றார்கள் என கூறியுள்ளார்.