இயக்குனர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் திருமண வீடியோவை ஒளிபரப்பு செய்ய நெட்பிலிக்ஸ் செய்த 25 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியே சென்று விடக்கூடாது என்று மிகவும் கவனமாக வேலையாட்களுக்கு அனுமதி கொடுக்காமல் பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. தற்போது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருவதால் விதிமுறைகளை மீறியதாக netflix நிறுவனம் 25 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.