நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சட்ட நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் நடிகை நயன்தாராவுக் ஆதரவாகவும் எதிராகவும் உள்ளது. மேலும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சில சட்ட விதிமுறைகள் உள்ளது. அவற்றை அவர்கள் மீறி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இது குறித்து சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அதில் வாடகை தாய்க்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை தமிழகத்தில் தான் அளிக்கப்பட்டதா,தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.