நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருக்கின்றது. திருப்பதியில் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் தேவஸ்தானம் 150 பேர் திருமணத்தில் பங்கேற்க அனுமதி அளிக்காத நிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகின்றது.
இந்த நிலையில் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்ற பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. திருமணத்திற்கு விஜய்சேதுபதி, சமந்தா உள்ளிட்ட 3 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திருமண வரவேற்புக்கு 30 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என 30 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகின்றது.
மேலும் நயன்தாரா முன்னணி ஹீரோக்கள் பலரும் ஜோடியாக நடித்திருப்பதால் அனைவரையுமே திருமணத்திற்கு அழைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகின்றது. முன்னணி செலிபிரிட்டி 30 பேர் உட்பட 200 பேரை அழைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் திருமண வரவேற்பு திருமணத்திற்கு முந்தைய நாளான ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் நேரலை செய்ததாகவும் தகவல் பரவி வருகின்றது. ஆனால் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் திருமணம் குறித்து இதுவரை அதிக அபூர்வமாக எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமீபகாலமாக இருவரும் அடிக்கடி பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.