இயக்குனர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட் பிலிக்ஸ் நிறுவனம் தான் செய்தது.
இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் வீடியோ வெப் சீரிஸ் ஆக விரைவில் வெளியாவதாக புதிய புகைப்படங்களை வெளியிட்டு netflix அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருமண வீடியோவில் நயனின் வாழ்க்கை பயணம் இடம்பெறும் என்றும் இதற்கான டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.