கேரள மாநிலத்தில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உட்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இதுகுறித்து கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமதுஷாபி மற்றும் அவரது கூட்டாளி பகவல்சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா போன்றோரை கைது செய்தனர். இதையடுத்து கைதானவர்களை காவல்துறையினர் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பும், பத்மாவை சென்ற மாதமும் நரபலி கொடுத்ததாக 3 பேரும் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி நரபலி கொடுக்கும் முன் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதையும் ஒப்புக் கொண்டனர். அதன்பின் அவர்களின் மர்ம உறுப்புகளை தனித் தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நர மாமிசத்தையும் பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். அதை காவல்துறையினர் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி இருக்கின்றனர். இதற்கிடையில் நரமாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்..? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது அதை பெங்களூருவில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின் நரமாமிசத்தை வாங்க தயாராக இருந்தவர்கள் யார்..? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.