பெருங்காயத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.
பெருங்காய டப்பா மணம் வீசும் என்பதால்,அதற்கு கடலில் கரைத்த பெருங்காயம் என பொருள் வந்திருக்கலாம்.
2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும்.
அரை கிராம் பொதித்த பெருங்காயத்தைப் பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாத நோய், மண்டை நீரேட்டம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம், வெறி நாய்க்கடி வலிப்பு, தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, குடல் நோய்கள் ஆகியவை நீங்கும்.
பெருங்காயத்தை சமையலில் அதிகமாக சேர்த்துக் கொண்டால்,அது நரம்புகள், மூளை இரண்டையும் இயல்பு நிலையாக்குவதோடு பாதிப்புகள் வராமல் தடுக்கும்.
பெருங்காயம், வாய்வு கோளாறுகளுக்கு மிகவும் பயன்படுகிறது.
பெருங்காயம், நரம்புக் கோளாறுகளுக்கு நல்லதொரு தீர்வு. நரம்பு சம்பந்தமான தலைவலி, ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது.
அதன் இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது.
பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள், மார்புசளியினை-நுரையீரல் – சுவாசமண்டலம் வழியாக இருமல் மூலம் வெளியேற்றுகிறது.
மூச்சுக்குழல் அழற்சி,மார்புவலி, கக்குவான் ஆகியவற்றை போக்க உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து, ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.