திருச்செந்தூர் பி.ஜி மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நரம்பியல் நோய் எதிர்ப்பாற்றல் சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டாக்டர்கள் ருக்மணி, கண்ணன், நிர்மல், ஆனந்த், நடேசன், பாபநாசகுமார், பானு கனி, நீலகண்ட குமார், தேன்மொழி, சாதிக் ஜாபர், சரவணமுத்து மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள நரம்பியல் தொடர்பான வசதிகள் குறித்து வசதிகள் குறித்து நிபுணர் குகன் ராமமூர்த்தி, மகப்பேறு சிறப்பு டாக்டர் மலர்விழி குகன் போன்றோர் பேசி உள்ளனர்.
இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மையத்தை இந்திய மருத்துவ சங்க திருச்செந்தூர் கிளை செயலாளர் டாக்டர் வெற்றிவேல் திறந்து வைத்துள்ளார். இதில் தீவிர சிகிச்சை கோளாறுகளுக்கான ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு மிகவும் பயனுள்ளதாகும். இந்த மருத்துவமனை என்.ஏ.பி.எச் தேசிய அங்கீகாரம் பெற்றதாகும். இங்கு இம்யூனோதெரபிகள் பிளாஸ்மா மாற்றம் செய்து நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு கோளாறுகளை சரி செய்யும் வசதியும் இந்த மருத்துவமனையில் உள்ளது.