Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நரிக்குறவர் மாணவி இல்லத்தில்…. இட்லி, வடை சாப்பிட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

ஆவடியில் நரிக்குறவர் மாணவி இல்லத்தில் இட்லிவடை சாப்பிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் அவர்களுடன் உரையாடினார்..

அதனை தொடர்ந்து ஆவடி பகுதியில் இருக்கக்கூடிய நரிக்குறவர் இன பகுதி மக்கள் வசிக்கக்கூடிய குமார் என்பவருடைய இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு  கொடுக்கப்பட்ட சிற்றுண்டி உணவை முதலமைச்சர் ஸ்டாலின் சாப்பிட்டார்.. நாற்காலியில் அமர்ந்து இட்லி, வடை சாப்பிட்டார்..

மேலும் தேநீர் அருந்திய முதலமைச்சர் மு க ஸ்டாலின் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.. இதனால் குடும்பத்தினர் மிகவும் சந்தோஷ பட்டனர்… அதுமட்டுமில்லாமல் அந்தப் பகுதி மக்கள் தொழில் மூலமாக வரக்கூடிய பாசிமணி மாலையை மாணவிகள் ஸ்டாலின் கழுத்தில் போட்டு விட்டனர்.. அதனை அணிந்து கொண்டார்…

முன்னதாக பூங்கொத்து தந்து முதல்வர் ஸ்டாலினை நரிக்குறவ இன மாணவிகள் வரவேற்றனர்.. முதலமைச்சர் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

 

Categories

Tech |