பாலியல் வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அருகே சண்முகா நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கு கல்லூரியின் முதல்வரும் அ.தி.மு.க பிரமுகர் வக்கீல் செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அமுதவல்லி மற்றும் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியும் உடந்தையாக இருந்துள்ளனர். இது தொடர்பாக மாணவி குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி செந்தில் குமார், அமுதவள்ளி உள்பட 3 பேரில் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்ததால் காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தலைமறைவாக இருந்த 1 மாணவியை கடந்த மே மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தற்போது சென்னையில் உள்ள மேல்மருவத்தூரில் தலைமறைவாக இருந்த அமுதவள்ளி மற்றும் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.