Categories
தேசிய செய்திகள்

நலத்திட்டங்களை இலவச திட்டங்கள் என்று எப்படி சொல்லலாம்…. ராஜஸ்தான் முதல்வர் திடீர் அதிரடி….!!!!

ஏழை மக்கள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது என முதல்வர் கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை அண்மையில் விமர்சித்து இருந்தார். இந்த இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது எனவும் கூறினார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவிகளை இலவச திட்டம் என்று கூற முடியாது.

வளர்ந்த நாடுகளில் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை இலவச திட்டங்கள் என்று கூற முடியாது. மாநில அரசுகள் மக்கள் நலனில் தான் மிகுந்த அக்கறை கொள்கிறது. மேலும் ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |