தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி வேலுமணி கூறியதாவது, சொத்து வரி உயர்வு அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை வாபஸ் பெற்றது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக அரசு இந்த சொத்து வரி உயர்வை திரும்ப பெறவேண்டும். கடந்த ஆட்சியில் கொண்டு வந்த நலத் திட்டங்கள் அனைத்தையும் மறுபடியும் கொண்டு வரவேண்டும்.
அதோடு கோவையில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பல மக்கள் நலப் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் பல பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைந்துள்ளதாகவும், தமிழகமும் அதை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.