சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த 15வது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜடஜா தலைமையில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி முதல் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கியது.
சென்னை அணியின் அதிக தோல்வியால் ஜடேஜாவின் பேட்டிங், பௌலிங் என இரண்டுமே சொதப்ப ஆரம்பித்தது. அது மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் ஜடேஜா சொதப்ப ஆரம்பித்தார். இதையடுத்து ஜடேஜா அழுத்தம் காரணமாக தோனியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து விட்டார். இதற்குப் பிறகு ஜடேஜா வேண்டுமென்றே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்றும், இதன் காரணமாக சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜடேஜாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் சிஎஸ்கே அணியை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார். அது மட்டும் இல்லாமல் தற்போது டிரேடிங் விண்டோ மூலம் சென்னை அணியில் இருந்து வெளியேறவும் உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அதன்படி ஜடேஜாவை தோனி தான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார். இதற்கு காரணம் என்னவென்றால் ஜடேஜா கேப்டன் பொறுப்பு ஏற்றதிலிருந்து தொடர்ந்து சென்னை அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்ததன் காரணமாக அவர் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மோசமாக விளையாட ஆரம்பித்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் ஜடேஜாவின் நிலையை யோசித்த தல தோனி இப்படி தொடர்ந்து அழுத்தத்துடன் விளையாடினால் ஜடேஜாவுக்கு நிச்சயம் இந்திய அணியில் விளையாடும் போதும் அவரது ஆட்டம் மோசமாக அமையும்.. எனவே இந்திய டி20 அணியில் அவர் இடத்தை இழந்து வெளியேறவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக தோனி ஜடேஜாவின் மனநிலையை சமன்படுத்துவதற்காக நிர்வாகத்திடம் பேசி அவரது கேப்டன்சியை பறித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜாவை நீக்க தோனி காரணமாக இருந்தாலும் கூட இந்திய அணியில் ஜடேஜா அவருடைய இடத்தை இழந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயே தோனி கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.. ஆனாலும் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது காரணமாக மன வருத்தம் அடைந்த ஜடேஜா அணி நிர்வாகத்துடன் மனக்கசப்பு ஏற்பட்டது மட்டும் இல்லாமல் தற்போது அணியிலிருந்து வெளியேறவே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது