Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்லது சொன்னா கேட்காம… போலீசை தாக்கிய … பால்வியாபாரி அதிரடி கைது …!!

பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்த உளவுப்பிரிவு போலீசாரை தாக்கிய பால் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தின் ,டிபி சத்திரம் காவல்நிலையத்தில் உளவுப் பிரிவில் போலீசாக வேலை செய்து வருபவர் 42 வயதான நிக்கோலஸ் என்பவர். இவர் நேற்று முன்தினம்  காலை அண்ணா நகரின் கிழக்கு பகுதியில் வேலையின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த  சென்னை மாநகர பஸ்சில் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயண  ம் செய்துள்ளனர் .இதை பார்த்த போலீசார் நிக்கோலஸ் கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் பஸ்ஸை நிறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் போலீசார் நிகோலஸ் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்துள்ளார் .பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்போவதாக எச்சரித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பால் வியாபாரி ஆனந்தன் என்பவர் மாணவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அப்போது போலிஷாருடன் ,ஆனந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது .இதில் போலீசார் நிக்கோலஷை ஆனந்தன் பலமாக தாக்கியுள்ளார் . இதில் பலத்த காயமடைந்த நிகோலஸ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் தொடர்பாக டி.பி சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதன் பின்னர் பால்வியாபாரி ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |