Categories
அரசியல்

நல்லது சொல்லுங்க கேட்குறோம்…. பாஜகவுக்கு அடிபணிய மாட்டோம்.. அமைச்சர் நெத்தியடி பதில் ..!!

போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒரு போராளியாக இருந்து பல ஆண்டுகாலம் உழைத்ததன் விளைவாக தான் இன்றைக்கு முதலமைச்சர்.  போராட்டங்கள் நடத்துவோம், போராட்டம் செய்வோம் என்று அச்சுறுத்தலுக்கு எல்லாம் நிச்சயம் இந்த அரசு அடிபணியாது. நியாயமாக எந்த செயலாக இருந்தாலும் அந்த செயலுக்கு தலைவணங்க காத்திருக்கின்றோம்.

எச்.ராஜாவுக்கு தற்போது அரசியலில் களம் இல்லை. ஏதாவது ஒரு களத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தினந்தோறும் ஏதாவது கூறிக் கொண்டே இருக்கின்றார். அவர் கூறுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அவர் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும், ஐந்து மாதங்கள் தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சி அமைத்து ஆகின்றது. அதற்கு முன்பு இருந்த 10 ஆண்டுகள் இவர்கள் தோழமையோடு தோள் கொடுத்துக்கொண்டிருந்த ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

அந்த ஆட்சியிலே செய்யப்படாத திட்டங்கள், முற்றிலுமாக செயல் இழந்து அந்த ஆட்சியால் சீர் கெட்டிருந்த நிர்வாகத்தை இந்த ஐந்து மாதங்களில் முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு நிமிர்த்தி இருக்கின்றோம். மீண்டும் வருகின்ற காலங்களில் இதை விட பன் மடங்கு வேகமாக இந்த துறை செயல்படும். முக்கியமாக இதுபோன்ற நபர்கள் என்ன கருதுகிறார்கள் என்றால், இதை வைத்துதான் நாம் அரசியல் செய்து கொண்டிருந்தோம்.

இன்று இந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை செம்மையா இருக்கின்றது. இதனால் நமக்கு பிற்காலத்தில் அரசியல் களமே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் கூக்குரல் கொண்டிருக்கின்றார்கள். நல்லவைகளை ஏற்று, எங்களை நாங்கள் திருத்திக் கொண்டு பணியாற்ற தயாராக இருக்கின்றோம். அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் அல்லவை என்றால் அதை உதாசீனப்படுத்திவிட்டு எங்கள் பயணத்தை நாங்கள் தொடருவோம் என தெரிவித்தார்.

 

Categories

Tech |