Categories
தேசிய செய்திகள்

நல்லாதா படிச்சிட்டு இருக்காங்க… திடீர்னு இப்படி பண்ணிக்கிட்டாங்க… இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!!

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தயாராகி வந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி என்ற நகரை சேர்ந்த இளம்பெண் அகன்ஷா மிஸ்ரா. இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யூ.பி.எஸ்.சி என்கின்ற சிவில் சர்வீசுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக கடந்த 2-ஆம் தேதி டெல்லிக்கு வந்து, மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜ் நகர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் பிணமாக தொங்கியுள்ளார். இவர் எதற்கு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து முழுமையான காரணம் தெரியாததால் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |