தேனி மாவட்டத்திலிருக்கும் பிரசித்தி பெற்ற கோவில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்தில் அமைந்திருக்கக் கூடிய கம்பராயபெருமாள் கோவிலின் வளாகத்தில் தென்னை, சந்தனம் உட்பட சில மரங்கள் உள்ளது. இந்த நிலையில் கம்பம் பகுதியில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவிலின் வளாகத்திலிருந்த தென்னை மரத்தில் திடீரென்று மின்னல் தாக்கியது.
இதனைத் தொடர்ந்து அதில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோவிலின் நிர்வாகத்திற்கும், கம்பத்திலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர்.