Categories
தேசிய செய்திகள்

“நல்லா ஏமாத்திட்டாங்க” நீதிமன்றத்திற்கு ஓடிய கணவர்… அதிர்ச்சி பின்னணி…!!!!

ஆணுறுப்பு இருக்கும் பெண்ணை தனக்கு ஏமாற்றி திருமணம் செய்து விட்டதால் விவாகரத்து வழங்கும்படி கணவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்று. அவர் ஒரு பெண் அல்ல எனவும் அவருக்கு தெரியவந்தது. பரிசோதனையில் அவர் மனைவிக்கு பாலுறுப்பில் குறைபாடு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதனை சரிசெய்ய மருத்துவமனையில் அவர் ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது. மருத்துவர் கூற்றுப்படி அவருக்கு பெண் பாலின உறுப்பு  இருந்தாலும் தாம்பத்திய வாழ்க்கையையோ,  குழந்தை பிறப்போ  சாத்தியம் இல்லை எனத் தெரிந்தது. இதனையடுத்து தனது மனைவியை அழைத்து செல்லுமாறு அவரது தந்தையிடம் கணவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்தப் பெண்ணின் தந்தை ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

அதோடு அந்த பெண்ணிற்கு அறுவைசிகிச்சையும்  செய்யப்பட்டது. இதற்கிடையில் தனது மனைவி பெண் அல்ல என்றும், அதனால் தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் எனவும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் கணவன் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்ற இந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவன் மேல் முறையீடு தாக்கல் செய்துள்ளார். “அந்த மனுவில் தனது மனைவியிடம் பெண்மை இல்லை என்றும் பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் இல்லை, எனவும்  அவர் பெண்ணே இல்லை. தன்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாகவும் இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.  மேலும்  மனைவியின் மருத்துவ  தகவல்களையும் சமர்ப்பித்திருந்தார்”.

இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும்எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக மனைவி பதில் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறபட்டுள்ளது.

Categories

Tech |