பிரபல படுக்கை மற்றும் தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தூங்கும் வேலைக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Delay Love Luxury என்னும் நிறுவனம் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு தேவையான படுக்கை மற்றும் தலையணைகளை தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த ஐந்து நட்சத்திர விடுதிகளில் படுக்கை மற்றும் தலையணை வசதி எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே தூங்கும் வேலைக்காக மட்டும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கு சம்பளம் ரூபாய் 1.4 லட்சம் வரை வழங்குகிறார்கள். இந்த விடுதிகள் இங்கிலாந்து நாட்டில் மிகவும் பிரபலமானவை மற்றும் அதிக சொகுசுகளை கொண்டவை.
தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தூக்க அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்நிறுவனம் இம்மாதிரியான சோதனைகளை செய்து வருகிறது. இதில் தூங்குவதற்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அங்கு தனியாக அறை மற்றும் உணவு என அனைத்தும் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு இரவில் தூங்குவதற்கு மட்டும் சுமார் 20 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதையடுத்து தூங்கிய பின்னர் அனுபவம் எப்படி இருந்தது என்றும், இன்னும் தயாரிப்புகளை மேம்படுத்தலாமா? வேண்டாமா? என்று வீடியோவாக பதிவிட்டு அந்நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும்.