Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லா புரிஞ்சுக்கோங்க…! பாஜகவோடு கூட்டணி இருக்கணும்… அவுங்க ஹெல்ப் வேணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  நகராட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றுவோம். பேரூராட்சிகளிலும் அதிக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே 11 இடத்திற்கு 10 இடங்கள் வெற்றி பெற்றோமோ,  அதேபோல மேயர், நகராட்சி, பேரூராட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு எங்களது கழக நிர்வாகிகள் உழைப்பார்கள்.

எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் 60 கோட்டங்களில் போட்டியிட விரும்புகிறார்கள், அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களது கடமை.  அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் அந்த கடமை இருக்கிறது.  தேசிய அரசியலில் எப்பொழுதும் நாட்டின் நலன் கருதி, எல்லாக் கட்சியும் தேசிய கட்சியோடு இணைந்து தான் போட்டியிடுகிறது.

அதன் அடிப்படையில் அண்ணா திமுக கட்சியும் தேசிய கட்சியோடு இணைந்து செயல்படுவோம். அப்போதுதான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். நாம் எல்லாமே மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் கட்சி நடத்துகிறோம். ஆனால் அதற்கு தேவையான உதவிகளை தேசிய அளவில் இருந்தால்தான் பெற முடியும். அதாவது நன்றாக புரிந்து கொள்ளுங்கள்…  நீங்கள் அப்படி தான் கேள்வி கேட்பீர்கள். எதாவது போட்டு வாங்க முடியுமான்னு பாக்குறீங்க,  அது நடக்காது என தெரிவித்தார்.

Categories

Tech |