Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்ததுல வந்து இப்படி செஞ்சுடானே…. ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் நிலக்கோட்டையில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாயைப் பார்ப்பதற்காக ஆட்டோவில் குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஆட்டோ டிரைவருக்கும், சாருமதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சாருமதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |