Categories
தேனி மாவட்ட செய்திகள்

நல்லா போயிட்டு இருந்தவருக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. ஊராட்சிமன்ற ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சிமன்ற ஊழியர், சாலை தடுப்பு சுவரில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டம் உத்தமபுரத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்  சம்பவத்தன்று அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில்  சென்றார். அப்போது பார்த்திபன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென்று நிலைதடுமாறி பல்லவராயன்பட்டியிலிருக்கும் காலணிக்கு அருகே உள்ள தடுப்புச் சுவரின் மீது பலமாக மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பார்த்திபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோம்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |