Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நல்ல காளானை இனம் காண்பது எப்படி…? அது ரொம்ப ஈஸி… படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

இந்தியாவில் காளான் இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதில் நல்ல காளானை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம் .

சைவ விரும்பிகள் மற்றும் அசைவ விரும்பிகள் அனைவரும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் உணவகங்களில் காளான்களை வித்தியாசமான முறையில் பல வகைகளில் செய்து வருவதால் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த உணவாக மாறியுள்ளது. இந்த காளானில் எது நல்ல காளான் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அது மிகவும் எளியது. காளானில் எந்த புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல் உறுதியாக இருக்கும் காளான்கள் நல்லது. காளான்கள் நடுத்தர அல்லது பெரிய அளவில் இருக்க வேண்டும்.

காளான் வாங்கும்போது அவை மெலிதாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காளான்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்காமல் இருப்பது நல்லது. புதிய காளான்களை ஒரு ஜிப் லாக் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது. முதலில் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அவற்றை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காளான்களில் சுவையை அனுபவிக்க அவற்றை நீண்ட நேரம் சமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |