Categories
மாநில செய்திகள்

நல்ல சாலை வேண்டுமா…? அப்ப மக்கள் அதற்கான பணத்தை கொடுக்கணும்…. நிதின் கட்கரி பேச்சு….!!

சிறந்த சாலை கட்டமைப்பு நமது நாட்டில் தேவை என்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தவேண்டும் என சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது: “நீங்கள் திருமணத்தை ஏசி மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் திருமணத்தை வெளியிலும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

அதைப்போல் தான் நல்ல சாலைகள் மக்களுக்கு வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பயண நேரத்தை விரைவுச்சாலை கணிசமாக குறைக்கும். இதனால் எரிபொருளுக்கான செலவு குறையும். டெல்லி, மும்பை விரைவு சாலை பயணம் 12 மணி நேரமாக குறைக்கும். சாதாரணமாக டெல்லியிலிருந்து மும்பை அடைய ஒரு லாரிக்கு 48 மணி நேரம் ஆகும். ஆனால் விரைவு சாலையில் 18 மணி நேரம் மட்டுமே ஆகும்” என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்

Categories

Tech |