இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உதயா, பாரதிராஜா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Lot of good news coming your way! in sha Allah @SilambarasanTR_ pic.twitter.com/RiO6d3zdfF
— Raja yuvan (@thisisysr) June 24, 2021
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மெஹர்ஸைலா என்ற இந்த பாடலை யுவன், பவதாரணி இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘நிறைய நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ்’ என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.