விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை புகழ் பெற்றார். அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள புகழ், அடுத்ததாக Zoo keeper என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் புகழ், பென்சியா என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூறினார்.
விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது புகழ் – பென்சியா திருமண தேதி உறுதியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி புகழ் – பென்சியா காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.