தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள, Dhokha round d cornerபடத்தின் டீசர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய மாதவன், நல்ல படங்களை நாம் வெளியிட்டாலே சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். பாலிவுட்டில் மிகக் குறைவான தென்னிந்திய படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. ஆனால் புஷ்பா, பாகுபலி மற்றும் ஆர்ஆர் ஆர் போன்றவை தான் எனக்குத் தெரிந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.