Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நல்ல படியாக சிகிச்சையளித்த மருத்துவமனை…. 1,000 துரான்டா மலர் செடியை அனுப்பி வைத்து கவுரவித்த கலெக்டர்..!!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1000 துரான்டா மலர்ச் செடிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேருக்கும் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்ததை தொடர்ந்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கலெக்டர் மற்றும் அவருடைய மனைவியை  நல்ல முறையில் சிகிச்சை அளித்து பார்த்து வந்தனர்.

பின் கொரோனா சரியாகி அவர்கள் ஊட்டிக்கு திரும்பி சென்றனர். இந்நிலையில் கலெக்டரும் அவர் மனைவியும் கொரோனா தொற்றால் பாதித்த நமக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்த கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையை கெளரவிக்கும் வகையில் அந்த மருத்துவமனையை பசுமை வனமாக மாற்ற முடிவெடுத்தார்.

இந்நிலையில் நீலகிரியில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து ஆயிரம் துரான்டா மலர் செடிகளை வாங்கி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மருத்துவர்களுக்கும் நர்சுகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அந்த மலர்ச்செடிகள் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் நடப்பட்டது.

Categories

Tech |