கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்தன் காரணமாக பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மேலும் பலரும் தங்களுடைய வேலைகளை இழந்து உள்ளனர். இந்நிலையில் நிறுவனம் ஒன்று ஈசியாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்தவகையில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் wakefit என்ற நிறுவனம் படுத்துத் தூங்குவதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்குகிறது.
இதுகுறித்த அந்நிறுவனத்தின் அறிக்கையில், இது ஒரு இன்டர்ன்ஷிப் திட்டம் ஆகும். கடந்த சீசனிலும் இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த வருடமும் இந்த இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தலா 1 லட்சமும், வெற்றியாளருக்கு 10 லட்சம் பரிசு மட்டுமல்லாமல் India’s Sleep Champion என்ற பட்டமும் கிடைக்கும். இந்த போட்டிக்கு இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.