Categories
மாநில செய்திகள்

நல்ல மனுஷனப்பா…! பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் குளம் அமைக்கும் பணியை அந்த மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேறும் இடம் ஆகியவற்றை கேட்டறிந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்படியே அருகிலிருக்கும் அழிஞ்சி வாக்கம் ஊராட்சியிலுள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அப்பள்ளியிலுள்ள ஒரு வகுப்பறைக்கு சென்று, அங்குள்ள மாணவ – மாணவிகளுக்கு பாடமும் எடுத்தார். ஒரு கலெக்டர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |