கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கபட்ட இவர், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், குமிட்டாபுரத்தில் நடைபெற்ற பீரேஸ்வரர் சாணியடி திருவிழாவில், தந்தையுடன் மகன் புனித் ராஜ்குமார் கண்ணாம்பூச்சி விளையாடும் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த நடிகர் புனித் படத்தைஅவருடைய ரசிகர்கள் தலையில் சுமந்தபடி சாணத்தை சுற்றிவந்து மரியாதை செலுத்தினர். இந்த கோயில் திருப்பணிக்கு புனித் ராஜ்குமார் நன்கொடை வழங்கியதற்கு நினைவு கூறும் விதமாக, புனித்தை அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.