மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளையும், சிகிச்சை அளிக்கப்படும் முறை, படுக்கைகள், தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் போன்ற வசதிகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார். மேலும் தனியார் மருத்துவமனையை விட நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.