Categories
தேசிய செய்திகள்

நல்ல வேலை பாக்குறவங்களுக்கு…. 1 பென்ஸ் கார் பரிசு…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பிறகு அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த வகையில் ஐடி துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சிக்கான பணியில் இறங்கியுள்ளன. எனவே ஊழியர்களுக்கு சலுகை தருவது, சம்பள உயர்வு, போனஸ் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான HCL நிறுவனம் தற்போது அசத்தலான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மெர்சிடஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  தற்போது நிர்வாக குழுவின் அனுமதிக்காக இந்த பரிந்துரை காத்திருக்கிறது என மனித வளத்துறை அதிகாரி அப்பராவ் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒன்றும் புதிதல்ல 2013 ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய 50 பேருக்கு பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் இந்த நடைமுறை நின்றுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |