டாஸ்மார்க் கடைக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம்சத்திரம் அருகே ஈரோடு செல்லும் சாலையில் இருக்கும் காட்டு பகுதியில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை அருகே ஏராளமான புல் வகைகள், மரங்கள், செடிகள், கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள செடிகள், கொடிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளன.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால் அருகில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து விட்டனர்.