இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்..
டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் 5, ரோஹித் சர்மா 27 (28) என அவுட் ஆகிய போதிலும், கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் குவித்தது. விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும், கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் பவுண்டரி, சிக்சர் என ஒரு பந்து வீச்சாளர்களையும் விட்டுவைக்காமல் விளாசி தள்ளினர். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் (4பவுண்டரி, 7 சிக்ஸர்) 86 ரன்களும், பட்லர் 49 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 80 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி வருகின்ற 13-ஆம் தேதி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்திய அணி தோல்வியடைந்த பின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது, இன்று இப்படி விளையாடியது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பின் வரிசையில் சிறப்பாக ஆடி நல்ல ஸ்டோரை எட்டி இருந்தோம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. இதெல்லாம் நாக்கவுட் போட்டிகளில் நிலவும் அழுத்தத்தை நாங்கள் எப்படி கையாளுகிறோம் என்பது குறித்தது. அணியில் உள்ள அனைவரும் இதற்கு விளையாடி பழக்கப்பட்டவர்கள்.
நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என யாருக்கும் கற்றுத் தர இயலாது. இது தனிநபரை பொறுத்த விஷயம். பந்து வீச்சில் நாங்கள் நன்றாக தொடங்கவே இல்லை. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். நாங்கள் நன்றாக பந்துவீசி பேட்டர்கள் ரன்கள் எடுத்திருந்தால் கூட அதனை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்..
முன்னதாக போட்டி முடிந்த பின் ரோஹித் சர்மா தனியாக சோகத்தில் உட்கார்ந்து கண்கலங்கி அழுதுள்ளார். அதன்பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமாதானப்படுத்தி அவரை அழைத்து சென்றார். ரோஹித் மனமுடைந்து அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/SportyVishal/status/1590670773437763584
Though I am not his fan, but this was literally heartbreaking moment.
Rahul Dravid consoles emotional Rohit Sharma after India's loss pic.twitter.com/l5YkR5p9aV
— Raather Abbas (@RatherAbbas541) November 10, 2022