Categories
மாநில செய்திகள்

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்… தமிழக அரசு பதில் மனு.!!

நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் பதில் மனுவை கொடுத்துள்ளது. அதில், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.  நளினி ரவிச்சந்திரன் விடுதலை குறித்து நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தங்களை விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Categories

Tech |