கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் வேகமாக சென்றது. அந்த காரில் இருந்த 5 வாலிபர்களும் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அச்சத்தில் 5 வாலிபர்களும் போலீசுக்கு பயந்து காரை அங்கேயே விட்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருகிலுள்ள தங்கும் விடுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் விபத்து நடந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிசிடிவி காட்சிகள் சமூக விடுதலைத்தில் வேகமாக பரவி வருகிறது.