Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் இடிந்து விழுந்த மேற்கூரை….. 2 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி….. பயங்கர சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் ட் தியோரியா பகுதியில் 2 மாடி கட்டிடமான பாழடைந்த வீட்டில் திலீப்(35) என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி சாந்தினி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயது மகள் உள்ளார். இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி மற்றும் 2 வயது மகள் ஆகியோர் கீழ்தளத்தில் உள்ள அறைக்கும் அருகில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணிக்கு திடீரென வீடு இடிந்து விழுந்தது.

இந்த விபத்தால் மூவரும் புதையுண்டனர். வீட்டின் கூரை இடி விழுந்த சத்தம் கேட்டது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடர்பாடுகளுக்கு அடியில் இருந்த அவர்களது உடல்களை அகற்றினர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளை புதைந்த மூன்று பேரின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பக்கத்து வீடுகளில் வசிப்பவரையும் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற்றினர். மேலும் கடந்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் அந்த கட்டிட விபத்து நடந்து இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

Categories

Tech |