Categories
மாநில செய்திகள்

நள்ளிரவில் என்ன ஒரு குதுகலம்….காங்கிரஸ் எம்எல்ஏ ரிசார்ட்டில் மது விருந்து…. போலீசிடம் பிடிபட்ட 50 இளம்பெண்கள்….!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் என்ற பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் வைத்து மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு, ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்பேரில் உடனே அவர் சம்பவ இடத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் கீழ் செயல்படும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரை சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதை அடுத்து ஆர்ச்சிர்ட்  ரிசார்ட் என்ற தனியார் விடுதிக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனை நடத்தி உள்ளனர். இதையடுத்து அங்கே அனுமதி இல்லாமல் திறந்த வெளியில் மது விருந்து நடந்து தெரியவரவே, சுமார் 500 பேர் அந்த மது விருந்தில் பங்கேற்று நடனம் ஆடிக்கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக 50 பேர் பெண்கள் இருந்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மதுவிருந்து நிறுத்தி யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து விங்ஸ் (WINGS) என்ற நிறுவன ஓப்பந்ததின் அடிப்படையில் இசை நிகழ்ச்சி மற்றும் மது விருந்தானது மேலாளர் சைமன் தலைமையில் நடந்து வருவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, சிறை பிடித்து வைக்கப்பட்ட இளைஞருடன் பேசி அறிவுரையையும் வழங்கியுள்ளார். மேலும் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய தாம்பரம் காவல் ஆணையர் ரவி, அந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, இங்கு போதைப் பொருட்கள் இல்லை என்றும் இந்தியாவின் பவரே நீங்கள்தான். மேலும் உங்களுடைய வாழ்க்கை கெடக்கூடாது. வாழ்க்கையை  மகிழ்ச்சியாக கழிக்கலாம்.ஆனால்  அதற்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியுள்ளார்.

மேலும் போதைக்கு அடிமையாகி விடாதீர்கள். நீங்கள் இங்கிருந்து செல்லலாம் எனவும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டாதீர்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். இந்நிலையில் இந்த மது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவன மேலாளர் சைமன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த தனியார் ரிசார்ட் வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவிற்கு சொந்தமானது தெரியவந்துள்ளது.

Categories

Tech |