Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனையடுத்து கலைச்செல்வியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |