Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெட்டுகுண்டு கிராமத்தில் ஜோதி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டுள்ளது. இதனால் கண் விழித்து வெளியே வந்து பார்த்த ஜோதிமுருகன் தனது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் ஜோதிமுருகன் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டார். ஆனால் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஜோதிமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |