Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. அதிர்ச்சியில் எழுந்த கிராம மக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனை இடித்து புதிதாக தொட்டி கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் தொட்டி இடிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் நள்ளிரவு நேரத்தில் நடந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் கோபமடைந்த பெண்கள் நெய்க்காரப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |