தர்கா நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூரில் முகமது பரிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தர்காவில் நிர்வாகியாக இருக்கிறார். நேற்று முந்தினம் 4.30 மணி அளவில் மர்ம நபர்கள் முகமது வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முகமது கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் சுவரில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இது குறித்து முகம்மது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.